Posts

Showing posts from December, 2025

ஒரு சொல்லின் சுற்றுப் பயணம்

ஒரு சொல்லின் சுற்றுப் பயணம் (இந்தி ட்யூஷன் சென்டரில் நடந்த கதை) அந்த பகுதியில் இருந்த ஒரு இந்தி ட்யூஷன் சென்டரில், மாணவர்கள் மாதம் மாதம் கட்டணம் செலுத்தி வந்தார்கள். ஆனால் சில மாதங்களில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. இருந்தாலும் கட்டணம் மட்டும் தவறாமல் வசூலிக்கப்பட்டது. ஒருநாள், ட்யூஷன் சென்டர் வெளியே 9-ஆம் வகுப்பு மாணவன் கார்த்திக் , தன் அம்மாவுடன் நின்றிருந்தான். அப்போது அவன் அம்மா, அருகில் நின்றிருந்த ஒரு பெண் மாணவியிடம் மெதுவாகச் சொன்னார்: “இந்தி டீச்சருக்கு இப்போ காய்ச்சல் மாதிரி… காரணம் என்ன தெரியுமா? கிளாஸ் இல்லாத மாதங்களுக்கும் கட்டணம் வாங்குறதால மனசுக்கு பாரமா இருக்கும் போல!” அந்த வார்த்தைகள் கேலி கலந்ததாய் இருந்தாலும், அதை கேட்ட அந்த மாணவி மனதில் பதிந்து கொண்டாள். அடுத்த நாள் ட்யூஷன் சென்டரில், அந்த பெண் மாணவி தயக்கத்துடன் இந்தி ஆசிரியை சரஸ்வதி மேடத்திடம் சொன்னாள்: “மேடம்… நேத்து கார்த்திக்கின் அம்மா இப்படிச் சொன்னாங்க…” அதை கேட்ட மேடத்தின் முகம் சற்றே கடினமாயிற்று. அதே நாளில், மேடம் அதே பேட்சில் படிக்கும் அஜய் மற்றும் ரவி என்ற இரண்டு மாணவர்களிடம் தனியாகச் சொன்னார்: “பார...